விவேகானந்தர் என்னும் பேரொளி
இந்தியா ஆன்மீகவாதிகள் நிறைந்த சொர்க்கம். இங்கு ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வசிப்பதை நம்மால் உணர முடியும். அதில் சில ஜீவ முக்தர்கள் பேரொளியாக தோன்றுவது இயல்பு. உலக ஆன்மிகம் என்னும் நதிக்கு வழித்தடம் அமைத்தவர் சவாமி விவேகானந்தர் . ஜனவரி 12 , 1883 இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான கொல்கட்டாவிலிருந்து இந்த ஆன்மீக சூரியன் உதயமானது.. பயணம் நீண்டது. இறைவனை அடைய எண்ணிய நரேந்திரன் கடவுள் இருக்கிறாரா / இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டு அந்த கேள்விக்கான விடையை அடைய அவர் முற்படுகிறார் கடவுளை காண ஆசை கொண்டு தேடிய அவரது ஆன்மாவிற்கு ஆள் காட்டி விரலாக வந்து நின்றது குருவி கருணை. கடவுளை கண்டார் ராமகிருஷ்ண பரமஹம்சர் உருவில். குருவருள் கிட்டியது. இந்த தேடல் 1893 ல் ஆன்மீக நறுமணமாய் அமெரிக்கா வரை பரவத் தொடங்கியது. அந்த நறுமணமானது ஒட்டு மொத்த இந்தியாவின் உள்ளார்ந்த குணமான . ' சகோதர சகோதிரிகளே ' என்ற வாசகமானது அரங்கை அதிர செய்தது. அதுவே உலக ஆன்மீகத்தின் தொடக்க நாள். மனிதன் எப்படி வாழ வேண்டும் ?. வாழ்விற்கான ரகசியம் என்ன என்பதைப்பற்றி அவர் சொல்லும் விதம் இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் அது நமக்கு புதுமையாகவே தெரியும்.
நமக்கான மாற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஒரு குறு தன்னை வழிமுறைப்படுத்திடும் விதத்தில் இருக்கிறது. சத்ரபதி சிவாஜியின் குருவுக்கு சிவாஜி மகாராஜ் அவர்கள் தனது கருவூலத்தை காட்டி என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதாக தகவல் உண்டு. அதை அறிந்த ஒளரங்கசிப் மன்னனின் ஆசிரியர் அவரிடம் இதைப்பற்றி கேட்டாராம். உடனே ஒளரங்கசிப் சொன்னாராம் நான் இந்த நிலையில் அதாவது சிவாஜியை வெற்றி கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று அவரை நாட்டை விட்டு துரத்தியதாக தகவல் உண்டு.
ஒரு குரு நமக்கு எப்படி அமைகிறாரோ அதைப்பொறுத்தே நமது வாழ்க்கை அமைகிறது. விவேகானந்தரின் குரு அவரை அவ்விதம் வழிநடத்தியவர். அவரின் தேடலின் தாகத்தை தனித்தவர். விவேகானந்தர் மனிதனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வார்த்தைகளை சொல்வதில் வல்லவர். ஆன்மீக தாகத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு அவரது வார்த்தைகள் திடமான நம்பிக்கையும் ஆழமான சிந்தனையும் தரும்.
மேலும் விவேகானந்தரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள Buy it
Semma
ReplyDelete