90 - களில் தொடங்கப்பட்டவை. ஒருவேளை இது உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம். இடுப்பில் ஒரு குடம், தலையில் ஒரு குடம் எனக்கொண்டு தனது இரு பிள்ளைகளை அழைத்து செல்கிறாள் தாய். இந்த பிள்ளைகளோ போடப்பட்ட பிஸ்கட்டுகளுக்கு நன்றிக்கடன் பட்ட நாய் குட்டி போல பின்னாலேயே நடக்கிறது. ஆனால் தாய்க்கு தலையிலும் இடுப்பிலும் பாரம் இருக்கையில் இடையில் ஏதேனும் குழியேதும் வந்து விடுமோ என்ற பயம் வேறு. குழந்தைகளை கருத்தில் கொண்டு வருகையில் பாதையில் இருபுறமும் வளர்ந்திருந்த களை செடிகளுக்கு மத்தியில் சிறியதாய் எட்டிப்பார்த்த முட்செடி காலை பதம் பார்க்க " ஆ " என்று கத்தியவள், வலியை கடந்தே செல்கிறாள்.அவ்வப்போது குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள்.
வீடுவந்து சேர்கையில் காலை எட்டு மணி. குழந்தைகளுக்கு பசிக்கும் என அடுப்பை பற்ற வைத்தவள். வாயு தேவனிடம் காற்றை கடன் வாங்கி வந்திருக்கிறாள். உதவிக்கு வந்த வாயுதேவன் எவ்வளவோ சமாதானம் செய்தும் அக்கினி தேவன் சமாதானம் அடைவதாய் தெரியவில்லை. இடையில் அவளுக்கு முணுமுணுப்பு. " பற்றி தொலையவே தொலையாது" இந்த அடுப்பு . மணி ஒன்பதைக் கடக்கையில் மெல்ல எழுந்து, நெட்டி முறித்து, லேசாக தலை காட்டினான் அக்கினி தேவன். என்ன சந்தோஷம் அவளுக்கு !!!.
எதோ கற்றறிந்த வேதியியல் அறிஞர் போல " அதைக்கொஞ்சம் போடு, இதைக்கொஞ்சம் போடு " என்று கலந்து சமைப்பாள் உணவை. நேரம் ஆக ஆக பசி அரசன் இருக்கையை பற்ற ஆரம்பிக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறாள். ஆனாலும் போரிடுகிறது வேதியியல் அரசி சமைத்த உணவில் இருந்து பெறப்பட்ட வாசனை போர் வீரர்கள். இறுதியில் வென்று விட்டது தாயின் கைப்பக்குவம். என் பசி போக்கிய பட்டத்து அரசி அவள்.
அத்தனையும் காலி ஏதேனும் கொஞ்சமாவது மிச்சம் வைச்சிருக்கலாம் என்று இப்போது தோன்றும் கிறது. இறுதியில் நீர்த்தேவன் பாதுகாத்து வைத்திருந்த நேற்று மீதமான உணவை உண்டு உயிர் வளர்த்தாள். பஞ்சத்திலும் சிரித்து மகிழ்ந்த காலம் அது.
சிலநேரம் எனக்கு தோன்றும் தாய் தாவரவியல் ஏதும் படித்திருப்பாளோ ? என்று . ஏனெனில் தட்டில் பரிமாறப்பட்ட உணவில் இலை, காய், பூ, தண்டு, வேர் என அத்தனையும் பிரிந்து கிடைக்கும். இடையிடையில் சித்த மருத்துவமும் பேசுவாள். ஆச்சர்யம் நான் கண்ட முதல் பல்கலைக்கழகம் அவள்.
காலம் மாற மாற மாறிய அவள் குணத்துக்கு என்ன மருந்திடப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் வேண்டுவதெல்லாம் அவள் கை தரும் அன்பு ஒன்றே. மீண்டும் அவள் என் கன்னம் கை வைத்து அம்மா நான் இருக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தை சொன்னால் போதும்.
No comments:
Post a Comment