ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார்
நூல் வெளி
ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் வன்கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
சொல்லும் பொருளும்
நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
நட்டல் - நட்புக் கொள்ளுதல்
எதுகை
நன்றியறிதல் - இன்னாத
நல்லினத் - சொல்லிய
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
பிறரிடம் நான் ________ பேசுவேன்.
விடை: ஆ) இன்சொல்
பிறர் நமக்குச் செய்யும் தீமையைப் பொறுத்துக்கொள்வது
ஆகும்.
விடை: ஈ) பொறைஅறிவு + உடைமை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
விடை: அ) அறிவுடைமை
இவை + எட்டும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
விடை: ஆ) இவையெட்டும்நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: ஆ) நன்றி + அறிதல்
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: ஈ) பொறை + உடைமை
கண்மணியே கண்ணுறங்கு
சொல்லும் பொருளும்
நந்தவனம் - பூஞ்சோலை
பார் - உலகம்
பண் - இசை
இழைத்து - பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்
முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
முக்கனி - மா, பலா, வாழை
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
மோனை
நந்தவனம் - நற்றமிழ்
பண்ணோடு - பார்போற்ற
High quality standard books with lowest price 📚 Get books 📚
தமிழர் பெருவிழா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
கதிர் முற்றியதும் ________ செய்வர்.
விடை: அ) அறுவடைவிழாக்காாலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ________ கட்டுவர்.
விடை: இ) தோரணம்
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: அ) பொங்கலன்று
'போகிப்பண்டிகை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
விடை: அ) போகி + பண்டிகை
பழையன கழிதலும் ________ புகுதலும்.
விடை: அ) புதியன
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ________ தரும்.
விடை: இ) துன்பம்
கீழ்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
கிடைக்கும் பொருள்களின் ________-க் கூட்டிப் புதிய
பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
விடை: (ஆ) மதிப்பைசிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளைக் ________ மாற்றலாம்.
விடை: கோலமாவாக
வணிகத்தின் நோக்கம் என்ன?
விடை: மனிதர்களுக்குத் தேவையான
பொருள்களைக் கிடைக்கச் செய்வதே
வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று.
மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
விடை: கிடைக்கும் பொருள்களின் மதிப்புகளைக் கூட்டி,
புதிய பொருளாக மாற்றுவதே மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
விடை: வணிகம் (அல்லது மதிப்புக் கூட்டுதல்)
படிப்போம்; பயன்படுத்துவோம்!
அறுவடை - Harvest
நன்றியுணர்வு - Gratitude
வட்டாரம் - Locality
தொட்டில் - Cradle
அரண்மனை - Palace
மலையுச்சி - Mountain Top
திருக்குறள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
விருந்தினரின் முகம் ________ வாடும்.
விடை: அ) நம் முகம் மாறினால்நிலையான செல்வம் ________.
விடை: இ) ஊக்கம்
ஆராயும் அறிவு உடையவர்கள் ________சொற்களைப் பேசமாட்டார்கள். விடை: இ) பயன்தராத
'பொருளுடைமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
விடை: இ) பொருள் + உடைமைஉள்ளவது + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: ஆ) உள்ளவதெல்லாம்பயன் + இலா என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: அ) பயனிலா
நயம் அறிக
குறள்:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
1. மோனைச் சொற்கள் (முதல் எழுத்து ஒன்றி வருவது)
உள்ளத்தால் - உள்ளலும்
கள்ளத்தால் - கள்வேம்
2. எதுகைச் சொற்கள் (இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது)
அடி எதுகை:
உள்ளத்தால்
கள்ளத்தால்
சீர் எதுகை:
உள்ளத்தால் - உள்ளலும்
கள்ளத்தால் - கள்வேம்
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லாம் ஊக்கம்
அசைவுஇலா உடையான் உழை
முறைப்படுத்திய திருக்குறள்:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
2.உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
முறைப்படுத்திய திருக்குறள்:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
இங்கே மேலே உள்ள அனைத்து வினா-விடைகளின் முழுத் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது:
கதைக்குப் பொருத்தமான திருக்குறள்
வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார். "
உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே,
பெயர் கொடுத்து விட்டாயா?" என்று கேட்டார். "இல்லையப்பா,
அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான்
பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை" என்றான் வேலன்.
"போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப்
போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ
அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்.
எனவே, நீ போட்டியில் கலந்துகொள்" என்றார் அப்பா.
உற்சாகம் அடைந்தான் வேலன்.
"நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா" என்றான்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
குறுவினா
எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
விடை: விருந்தினரின் முகம் மாறுபடும்படி நோக்குமாறு உணவளிப்பது விரும்பத்தக்கது அன்று.
எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?
விடை: பிறருடைய பொருளைத் திருடலாம் என்று தன் உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்.
ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?
விடை: தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
நாம் எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
விடை: பயன் தராத சொற்களை நீக்கி, பயன் தரும் நற்சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.
கூடித் தொழில் செய்
சொல்லும் பொருளும்
மல்லெடுத்த - வலிமைபெற்ற
சமர் - போர்
நல்கும் - தரும்
கழனி - வயல்
மறம் - வீரம்
எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
கலம் - கப்பல்
ஆழி - கடல்
எதுகை - கல்லெடுத்து - மல்லெடுத்து, ஊராக்கி - பேராக்கி
மோனை - கல்லெடுத்து - காட்டு, மல்லெடுத்து - மறத்தால்
நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
படத்திலுள்ள வினாக்களுக்கான சரியான விடைகள்:
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
விடை: இ) வீரம்
'கல்லெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
விடை: ஆ) கல் + எடுத்து'நானிலம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
விடை: ஆ) நான்கு + நிலம்
நாடு + என்ற என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______
விடை: அ) நாடென்றகலம் + ஏறி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
விடை: இ) கலமேறி
கடலோடு விளையாடு
சொல்லும் பொருளும்
கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
மின்னல்வரி - மின்னல் கோடு
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
மோனை
விடிவெள்ளி - விரிகடலே
அடிக்கும்அலை - அருமைமேகம்
நெய்தல் திணை
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதவர், பரத்தியர்
தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ
நூல் வெளி
உழைக்கும் மக்கள் தங்களது களைப்பை மறக்க உற்சாகத்துடன்
பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு
வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால்
இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழிற்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள்,
தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும்
நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு
என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
'கதிர்ச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
விடை: ஈ) கதிர் + சுடர்'மூச்சடக்கி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
விடை: அ) மூச்சு + அடக்கிபெருமை + வானம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: ஆ) பெருவானம்
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: அ) அடிக்கும் அலை
பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக.
விடிவெள்ளி - விளக்கு
மணல் - பஞ்சுமெத்தை
புயல் - ஊஞ்சல்
பனிமூட்டம் - போர்வை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ________.
விடை: அ) நுகர்வோர்வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: இ) வணிகச்சாத்துபண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
விடை: அ) பண்டமாற்று
'மின்னணு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
விடை: ஈ) மின் + அணு
'விரிவடைந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
விடை: ஆ) விரி + அடைந்த
இன எழுத்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் ________.
விடை: இ) கண்ணில்
தவறான சொல் ________
விடை: ஆ) வென்றான் (சரியான வடிவம்: வென்றான் - ன்ற)
பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக:
தென்றல் தென்றல்
கண்டம் கண்டம்
நன்றி நன்றி
மண்டபம் மண்டபம்
விடுகதைக்கு விடை காணுங்கள்:
தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
விடை: தராசுதண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?
误/விடை: கப்பல்
பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்
விடை: குதிரை
இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோர்க்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
விடை: நெல்மணி
ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும். அவை என்ன?
விடை: ஏற்றுமதி - இறக்குமதி
கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
திருத்தம்: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
திருத்தம்: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
திருத்தம்: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
திருத்தம்: அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
அது ஒரு இனிய பாடல்.
திருத்தம்: அஃது ஓர் இனிய பாடல்.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
பண்டம் - Commodity
பயணப்படகுகள் - Ferries
பாரம்பரியம் - Heritage
நுகர்வோர் - Consumer
கடற்பயணம் - Voyage
தொழில் முனைவோர் - Entrepreneur
கலப்படம் - Adulteration
வணிகர் - Merchant
திருக்குறள் - எளிய உரை
(எளிய உரை – டாக்டர் வ.சுப. மாணிக்கனார்)
8. அன்புடைமை
1. திருக்குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
எளிய உரை: அன்பிக்கும் அடைப்பு உண்டோ? அன்புடையவர் கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும்.
2. திருக்குறள்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
எளிய உரை: அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர்; அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர்.
3. திருக்குறள்:
அன்போடு இயைந்த வழக்கஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
எளிய உரை: உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர்.
4. திருக்குறள்:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்ளென்னும் நாடாச் சிறப்பு.
எளிய உரை: அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் புதிய நட்பைச் சிறப்பைத் தரும்.
5. திருக்குறள்:
அன்பாற்று அமர்ந்த வழக்கஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
எளிய உரை: உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர்.
6. திருக்குறள்:
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
எளிய உரை: அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை; வீரத்திற்கும் அதுவே துணை.
7. திருக்குறள்:
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
எளிய உரை: எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரை அறம் வருத்தும்.
8. திருக்குறள்:
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
எளிய உரை: நெஞ்சத்தில் அன்பின்றி வாழ முடியுமா? பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்க்குமா?
9. திருக்குறள்:
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
எளிய உரை: அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன?
10. திருக்குறள்:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
எளிய உரை: உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு; அன்பிலார் உடம்புகள் எலும்புத் தோல்கள்.
திருக்குறள் - எளிய உரை
(எளிய உரை – டாக்டர் வ.சுப. மாணிக்கனார்)
9. விருந்தோம்பல்
1. திருக்குறள்:
இருந்துஓம்பி இல்வாழவது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.
எளிய உரை: குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம் விருந்துபேணி உதவி செய்தற்கே.
2. திருக்குறள்:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
எளிய உரை: வந்தவிருந்து வெளிப்புறம் இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது.
3. திருக்குறள்:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
எளிய உரை: நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக; வாழ்வு துன்பப்பட்டு அழியாது.
4. திருக்குறள்:
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
எளிய உரை: முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள்.
5. திருக்குறள்:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
எளிய உரை: விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு விதைக்கூட இடவேண்டுமா?
6. திருக்குறள்:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
எளிய உரை: வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்து ஆவான்.
7. திருக்குறள்:
இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
எளிய உரை: விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது; விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை.
8. திருக்குறள்:
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
எளிய உரை: விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும் இழந்து பின் வருந்துவர்.
9. திருக்குறள்:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
எளிய உரை: செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்; இக்குணம் முழுவதும் அறிவிலியிடமே இருக்கும்.
10. திருக்குறள்:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
எளிய உரை: அனிச்சப்பூ மோந்தால் வாடும்; விருந்தோ முகமாறிப் பார்த்தாலே வாடிப் போகும்
திருக்குறள் - எளிய உரை
(எளிய உரை – டாக்டர் வ.சுப. மாணிக்கனார்)
10. இனியவை கூறல்
1. திருக்குறள்:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
எளிய உரை: அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையாளர் சொல்லே இன்சொல்லாம்.
2. திருக்குறள்:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
எளிய உரை: முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து கொடுப்பதினும் சிறந்தது.
3. திருக்குறள்:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம்.
எளிய உரை: முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக; அதுவே அறம்.
4. திருக்குறள்:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
எளிய உரை: யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக; துன்பந்தரும் வறுமை வாராது.
5. திருக்குறள்:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
எளிய உரை: பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்; பிறவெல்லாம் உடலணிகள்.
6. திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
எளிய உரை: நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும்; அறம் வளரும்.
7. திருக்குறள்:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
எளிய உரை: பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும் நலமும் தரும்.
8. திருக்குறள்:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
எளிய உரை: சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும்.
9. திருக்குறள்:
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
எளிய உரை: இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம் கடுஞ்சொற் கூறுகிறான்?
10. திருக்குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
எளிய உரை: இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே; கனியை விடுத்துக் காயைக் கவரலாமா?
திருக்குறள் - எளிய உரை
(எளிய உரை – டாக்டர் வ.சுப. மாணிக்கனார்)
20. பயனில சொல்லாமை
1. திருக்குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
எளிய உரை: கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை எல்லாரும் இகழ்வர்.
2. திருக்குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
எளிய உரை: பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு வேண்டாதன செய்தலினும் தீது.
3. திருக்குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
எளிய உரை: பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும்.
4. திருக்குறள்:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லார் அகத்து.
எளிய உரை: பயனில்லாத சிறுசொல்லைப் பலர்முன் கூறுவது அறிவும் இல்லை; நன்மையும் இல்லை.
5. திருக்குறள்:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.
எளிய உரை: பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும்.
6. திருக்குறள்:
பயனில்சொல் பாராட்டு வானை மகன்என்னல்
மக்கட் பதடி எனல்.
எளிய உரை: பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன் என்னாதே; மனிதப்பதர் என்று சொல்.
7. திருக்குறள்:
நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று.
எளிய உரை: சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்; பயனற்றவை சொல்லல் ஆகாது.
8. திருக்குறள்:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
எளிய உரை: அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன் இல்லாதவற்றைச் சொல்லார்.
9. திருக்குறள்:
பொருள்சீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசுறு காட்சி யவர்.
எளிய உரை: மயக்கம் இல்லாத நல்லறிஞர் மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார்.
10. திருக்குறள்:
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
எளிய உரை: பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக; பயனில்லா வீண் சொற்களைச் சொல்லாதே.
No comments:
Post a Comment