TNPSC கணிதம்: நிகழ்தகவு (Probability)
1. அடிப்படைச் சூத்திரம் (Basic Formula)
நிகழ்தகவு P(E) = n(E) / n(S)
- n(E) = சாதகமான முடிவுகளின் எண்ணிக்கை
- n(S) = மொத்தக் கூறுகளின் எண்ணிக்கை (Sample Space)
2. முக்கியமான விதிகள்
- எந்தவொரு நிகழ்ச்சியின் நிகழ்தகவும் 0 முதல் 1 வரை மட்டுமே இருக்கும் (0 ≤ P(E) ≤ 1).
- நிச்சயமான நிகழ்ச்சி (Certain Event): P(E) = 1
- இயலாத நிகழ்ச்சி (Impossible Event): P(E) = 0
- நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பதற்கான நிகழ்தகவு: P(E') = 1 - P(E)
3. முக்கியக் கணக்கு மாதிரிகள் (Important Types)
அ) நாணயங்கள் (Coins)
- 1 நாணயம் சுண்டப்படும்போது: n(S) = 2
{H, T} - 2 நாணயங்கள் சுண்டப்படும்போது: n(S) = 4
{HH, HT, TH, TT} - 3 நாணயங்கள் சுண்டப்படும்போது: n(S) = 23 = 8
ஆ) பகடைகள் (Dice)
- 1 பகடை உருட்டப்படும்போது: n(S) = 6
{1, 2, 3, 4, 5, 6} - 2 பகடைகள் உருட்டப்படும்போது: n(S) = 62 = 36
- எடுத்துக்காட்டு: முக எண்களின் கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு?
சாதகமான ஜோடிகள் = {(1,6), (2,5), (3,4), (4,3), (5,2), (6,1)} ⟹ 6
நிகழ்தகவு = 6/36 = 1/6
இ) சீட்டுக்கட்டு (Deck of Cards - 52)
- மொத்தச் சீட்டுகள்: n(S) = 52
- சிவப்புச் சீட்டுகள்: 26 (ஹார்ட் 13, டைமண்ட் 13)
- கருப்புச் சீட்டுகள்: 26 (ஸ்பேட் 13, கிளவர் 13)
- படச் சீட்டுகள் (Face Cards - J, Q, K): 12
- ஏஸ் (Ace) சீட்டுகள்: 4
ஈ) ஆண்டுகள் (Years)
- சாதாரண ஆண்டு (365 நாட்கள்): 52 வாரங்கள் + 1 நாள்
53 ஞாயிற்றுக்கிழமைகள் வர நிகழ்தகவு = 1/7 - லீப் ஆண்டு (366 நாட்கள்): 52 வாரங்கள் + 2 நாட்கள்
53 ஞாயிற்றுக்கிழமைகள் வர நிகழ்தகவு = 2/7
No comments:
Post a Comment