Monday, 20 July 2026

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 


18 - ஏப்ரல் -1930 ல் தஞ்சாவூர் மாவட்டம் செங்கப்படுத்தான் காடு தாமரங்கோட்டையில் பிறந்தவர் இவர். அருணாச்சலனார் மற்றும் விசாலாக்ஷி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் இவர் இவர் தனது 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் இவர் , இவர் பாடல்களில் உணர்ச்சியை காட்டியவர் . பாட்டாளி மக்களின் ஆசையையும் ஆவேசத்தையும் தனது பாடல்களில் துல்லியமாக காட்டியவர் இவர். ஜனசக்தி என்னும் பத்திரிகை இவருடைய பாடல்களை வெளியிட்டு வந்தது 1954 ல் திரையுலகில் தனது திறமையை பதிக்கத் தொடங்கியவர். “ படித்த பெண் “ என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை இயற்றினார். இவர் தனது 29 வருட வாழ்வில் விவசாயம் , மாடு மேய்த்தல் , உப்பளத்தொழிலாளி என 17 வகையான தொழில்களை செய்தவர். சக்தி நாடக சபாவில் இணைந்து நடிகர் ஆனார்.புதுவை சென்று பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்து கவிஞர் ஆனார், இப்போது சொல்லுங்கள் யார் இவர்.

No comments:

Post a Comment