தெளிவு குருவின் திருமேனி கண்டல்
கணிதத்துக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய சம்பந்தம் உண்டு. கணிதத்தில் நாம் படிக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் வாழ்க்கையின் நெறிமுறைகளை உணர்த்தும்.
வட்டம் என்பதில் எல்லா ஆரங்களும் சமம் ஆனால் வட்டத்தின் மையப்புள்ளி ஒன்றே ஒன்றுதான் . இந்த மையப் புள்ளியை சுற்றித்தான் ஏராளமான புள்ளிகள் இருக்கின்றன அதேபோல் தான் நாம் இறைவனை சுற்றியே இருக்கிறோம்
மையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு கோடும் முடிவடையும் இடம் ஆரம் என்று அழைக்கப்படும் மையத்தையும், வட்டத்தின் ஏதேனும் ஒரு புள்ளி நாம் எனில் புள்ளியை இணைக்கும் அந்தக் கோட்டை ஜீவ முக்தர்கள் , ஞானிகள் என்கிறோம். .
நான் என்னும் புள்ளியானது நகர்ந்து நகர்ந்து மையத்தில் இருக்கும் இறைவனை அடையும்போது நம்மைச் சுற்றி ஏற்படுகின்ற அத்தனையும் மறைந்துவிடுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
இந்த ஞானத்தின் விழிப்பு நிலையை அடைய ஞானிகளின் தேடல் என்பது மிகவும் அவசியம்: ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தேட ஆரம்பிக்கும்போதே குருவானவர் உங்களை வந்து அடைந்து விடுவார்
மொத்தத்தில் ஒரு மாணவன் குருவை தேடுவதை விட ஒரு குரு தனக்கான ஒரு நல்ல மாணவனை அதிகம் தேடிக் கொண்டிருக்கிறார்
ஒரு யோகியின் சுயசரிதை என்ற புத்தகத்தில் ஒரு குரு தனது சீடனை எவ்வாறு தேடிக் கொண்டிருக்கிறார். என்பதை மிக அழகாக விவரித்து இருப்பார் பரமஹம்சர் யோகானந்தர். ஞானத்தை தேடி நாம் எங்கேயோ அடைந்து கொண்டிருக்கிறோம் எனில் நமக்கான குரு காத்துக் கெண்டிருப்பார்.
சரி நமக்கான குருவை யார் காட்டுவார் ? காலம் ஒன்றே அதன் பதில். இரு நிகழ்வு ஒரே சமயத்தில் நடக்கிறது என்னவெனில் ஒரு குழந்தை பொம்மையை கண்டு பயம் கொள்கிறது ஆனால் அதன் பெற்றோர் பயப்படாதே அப்பா உடன் இருக்கிறேன். என்று தேற்றுகிறார்.
இந்த நிகழ்வை கொஞ்சம் உற்று நோக்குங்கள். குழந்தை பொம்மை தான் என்கின்ற உணர்வை மறந்து மாயையில் பயம் கொள்கிறது. உண்மையை உணர்ந்த ஞானிகள் குழந்தையின் மாயையை விளக்குகிறார். மேலும் உண்மையையும் விளக்குகிறார்.
இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒரு குரு நம்மை மாயையில் இருந்து விடுவிக்கிறார் அது மட்டுமல்ல உண்மை நிலையை உணரச் செய்கிறார் இவ்வாறு நமக்கு திருமந்திரத்தில் திருமூலர் விளக்குகிறார்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
இது ஒரு சொல் விளையாட்டு ஜெயகாந்தனின் குருபீடம் என்னும் கதையில் வரும் குரு அவர் வேறுவிதம்
இப்படி நமது குணங்களுக்கும், தகுதிகளுக்கும் ஏற்ப குரு நம்மை வடிவமைத்து விடுகிறார் அந்த வகையில் விவேகானந்தருக்கு பரமஹம்சர் பத்திரகிரியாருக்கு பட்டினத்தாருக்கு என பட்டியல் நீளும் ஆனால் அவர்களின் நோக்கங்களை பார்க்கும்போது ஞானிகள் தரிசனம் எவ்வளவு இன்றியமையாதது என்று தோன்றும்
எல்லையில்லா ஆனந்தம் பெற குருவின் தரிசனம் மிகவும் அவசியம்
தெளிவு குருவின் திருமேனி கண்டல்
No comments:
Post a Comment