திருக்குறள் அணி வகைகள்
- வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. (வினைசெயல் வகை)
- உவமை அணி
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (பொறையுடைமை)
- உவமை அணி
- தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (கல்வி)
- எடுத்துக்காட்டு உவமை அணி
- பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (தெரிந்து தெளிதல்)
- ஏகதேச உருவக அணி
- சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. (நடுவுநிலைமை)
- உவமை அணி
- வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (கூடா ஒழுக்கம்)
- இல்பொருள் உவமை அணி
- வடுச்சுனர்க் காவாதான் வாழ்க்கை எலிச்சுனர்க் வைத்தூறு போலக் கெடும். (குற்றங்கடிதல்)
- உவமை அணி
- கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. (இடனறிதல்)
- பிறிது மொழிதல் அணி
- கான முயல்எய்த அம்பியின் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (படைச்செருக்கு)
- பிறிது மொழிதல் அணி
- பயில்தொறும் நாள்நயம் போலும் பயில்தொறும் பண்புடைாளர் தொடர்பு. (நட்பு)
- உவமை அணி
- பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திருந்து அற்று. (பண்புடைமை)
- உவமை அணி
- தீயினால் சுட்ட புண்உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. (அடக்கமுடைமை)
- வேற்றுமை அணி
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (பொறையுடைமை)
- உவமை அணி
- செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை. (கேள்வி)
- சொற்பொருள் பின்வருநிலை அணி
- குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். (தெரிந்து தெளிதல்)
- சொற்பொருள் பின்வருநிலை அணி
- பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (தெரிந்து தெளிதல்)
- ஏகதேச உருவக அணி
- கலத்தால் பொருள்செய்து மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீ யற்று. (வினைத்தூய்மை)
- உவமை அணி
- அன்புநாண் ஒப்புரவு கண்ணேட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். (சான்றாண்மை)
- ஏகதேச உருவக அணி
- ஊடி பெயிரினும் தாமபெயரார் சான்றாண்மைக்கு ஆதி எனப்படும் வார். (சான்றாண்மை)
- ஏகதேச உருவக அணி
- உழுவார் உலகத்தார்க்குக் ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. (உழவு)
- ஏகதேச உருவக அணி
- இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்வர்ந் தற்று. (இனியவை கூறல்)
- உவமை அணி
- துப்பாய்க்குத் துப்பாய தூக்கித் துப்பாய்க்குத் துப்பாய தூஉம் மழை. (வான் சிறப்பு)
- சொல் பின்வருநிலை அணி
- எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (வாய்மை)
- சொற்பொருள் பின்வருநிலை அணி
- தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். (கயமை)
- வஞ்சப் புகழ்ச்சி அணி
- வேலோடு நின்றான் இவெவன் யதுபோலும் கோலோடு நின்றான் இரவு. (கொடுங்கோன்மை)
- உவமை அணி
- பண்என்னாம் பாடற் கியைபின்றேன்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (கண்ணோட்டம்)
- எடுத்துக்காட்டு உவமையணி
- நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று. (நன்றிஇல் செல்வம்)
- உவமையணி
- பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (பொருள்செயல் வகை)
- சொற்பொருள் பின்வருநிலை அணி
- குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. (பொருள்செயல் வகை)
- உவமை அணி
- இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. (நல்குரவு)
- சொற்பொருள் பின்வருநிலை அணி
- மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாறி யாம்கண்ட தில். (கயமை)
- உவமையணி
- தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். (கயமை)
- வஞ்சப் புகழ்ச்சி அணி
- சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். (கயமை)
- உவமை அணி
- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (இல்வாழ்க்கை)
- நிரல்நிறை அணி
- தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. (அடக்கமுடைமை)
- வேற்றுமை அணி
- மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். (ஒப்புரவறிதல்)
- உவமை அணி
- சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (தவம்)
- உவமை அணி
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (துறவு)
- சொல் பின்வருநிலை அணி
- பீலிபெய் சாகாடும் அச்சிலும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். (வலியறிதல்)
- பிறிது மொழிதல் அணி
- இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. (பகைத்திறம் தெளிதல்)
- பிறிதுமொழிதல் அணி
No comments:
Post a Comment