யார் சொன்னது?
சரஸ்வதி தேவி தன் கையில் வைத்திருக்கும் அந்த ஏட்டில் என்ன எழுதப்பட்டிருக்கும்? ஆனால் அது சிறிய ஏடு அந்த சிறிய ஏட்டில் இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் அடங்கியிருக்குமோ? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம்மை சுற்றி வருகின்றன அவள் வாசிக்கும் வீணையின் ஒலி நாதம் கேட்டால் நமக்கு எந்த வகையான குணநலன்கள் பிறக்கும் கல்வி பற்றியா ? அல்லது வேறு ஏதும் உண்டா? செயல் எனும் கேள்வி எழும்போதே ரகசியமாய் அவள் கையில் உள்ள புத்தகம் மற்றும் வீணை இரண்டும் பேசிய உரையாடல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் சரஸ்வதி
அன்பான புத்தகமே நீ உரைக்க விளையும் பொருள் என்ன? என்று தன் வசந்த குரலில் கேட்டது வீணை. என் அன்பான வீணையே மானிடர்கள் என்பவர்கள் நீர் பெருக்கினால் உடைபட்டு ஓடும் வெள்ள நதியில் ஒரு பாகம். அவர்களை நெறிமுறைப்படுத்த இங்கு சில விதிகள் உண்டு. அந்த நெறிமுறைகள் தான் என்னிடம் அடங்கியிருக்கின்றன. ஆனால் இதை படித்தவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்வார்கள். மனிதன் பாதை தடுமாறும் போதெல்லாம் வழிமுறை படுத்தும் ஞானிகளின் வரிசை பட்டியல் என்னுள்ளே அடங்கியிருக்கிறது அவர்கள் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு உடலமைப்புடன் தோன்றி கருத்துக்களை பரிமாறி செல்கின்றனர் ஆனால் அவர்கள் சொல்லும் சொல்லில் சமூக நலன் என்னும் அறம் ஆகியவை நிறைந்திருக்கும் இந்த உலக உயிர்கள் அனைத்தும் அப்படியே வாழ்கின்றன புற்களும் செடி கொடிகளும் தனக்கென எதையும் தயாரிப்பதில்லை. அவை மற்ற உயிரினங்களுக்காக வாழ்ந்து விட்டுப் போகின்றன. புல் மானுக்கு போஷாக்கு என்றால் மான் சிங்கத்துக்கு, சிங்கம் புழுக்களுக்கு புழுக்கள் மீனுக்கு, மீன் மனிதனுக்கு, மனிதன் மண்ணுக்கு. என உணவுச் சங்கிலியில் இயற்கை ஏற்படுத்தும் மாறுபாட்டை கவனி என் அன்பான வீணையே உனக்கு எல்லாம் புரியும். என்னுள் இருக்கும் ரகசியம் அதுவே. நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. நாம் ஒரு செயலை செய்ய பயன்படுத்தும் கருவி ஆவோம் . யார் தனது சொற்களில் சமூக நலனை விளைவிக்கிறாரோ அவர் யுகம் கடந்து வாழ்கிறார். இந்த பிரபஞ்சம் அவர்கள் மூலமாக தன்னை வேறு வேறு பாதையில் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதன் ஆன்மா ஒன்றே . அந்த ஆன்மா செய்யும் பணிகளை மட்டும் கவனித்து பாருங்களேன். சைவத்தில் நாயன்மார்களாகவும், சித்தர்களாகவும் , வைணவத்தில் ஆழ்வார்களாகவும் , புத்த மதத்தில் புத்தன் ஆகவும் நின்று நமக்கு வழிகாட்டுகிறது ஆனால் ஆன்மா சென்று சேரும் இடம் பக்தி என்னும் இறை சக்தியே
வீணையே பக்தி கொண்டு செய்யும் எந்த ஒரு செயலும் மந்திரமாகவும் , அவை சொல்லும் சொற்களின் வடிவம் பெறும் போது மந்திரச் சொல்லாகவும் மாறுகிறது
இந்த மந்திர சொல் தான் காஞ்சி மகா பெரியவாவுக்கு அன்னை காமாட்சி அருளிய பொக்கிஷம் ( போன பகுதியில் பார்த்தோம்) அமைதியாக கேட்ட அன்னை சரஸ்வதி தேவி முகத்தில் மலர்ந்தது புன்னகை இன்னும் நாம் கற்க வேண்டியது ஏதோ மிச்சம் இருக்கிறது என்றே யோசித்தாள்.
கற்பனை உலகின் பூட்டைத் திறந்தது அந்த சிறிய ஏட்டின் சொல் “ கற்றது கைமண் அளவே என்றது “
No comments:
Post a Comment