Tuesday, 21 July 2026

நல்லிணக்கம்

 நல்லிணக்கம் 

ராவணன் ஆகிய நான்.  ராமனால் வதம் செய்யப்படுவதற்கு முன்பு விபீஷ்னன் எனக்கு சில அறிவுரைகளை கூறினான் ஆனால் நான் என்னும் அகம்பாவம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது நான் நிறைய நல்லது செய்தவன் ஆனால் அதன் பயன் என்ன ஒரு மரத்தால் ஓராயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும் ஒரு தீக்குச்சி ஆயிரம் மரங்களைக் கூட எரித்து விடும் நான் செய்த நல்லவைகள் அனைத்தும் அந்த ஒற்றை நற்பண்பு இல்லாததால் எரிந்து சாம்பலானது என் பசுஞ்சோலை நான் இப்போது உங்கள் ஒருவருக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ராமன் எப்போது வருவாரோ நான் எப்படி வாழ்கிறேன் என்பதற்கான சில உதாரணம் இதோ 

கல்வி என்பது மிக முக்கிய எனினும் குருவின் பேச்சைக் கேட்காமல் வாழும் ராவணனாய் சில நேரம் 

தவறே என்று தெரிந்தும் பணத்திற்காக எதையும் செய்யும் ராவணனாய் சில நேரம் 

இப்படி என்னுடைய முகங்களை எல்லா திசைகளிலும் பரப்பிக் கொண்டே தான் இருக்கிறேன் அனுபவப்பட்டவர்கள் அப்படி செய்யாதே என்று சொல்லும்போது கூட அலட்சியப் போக்கை காட்டும் ராவணனாய் சிலநேரம் இருக்கிறேன் 

ஒரு நாள் நான் ராமனை கண்டேன் எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை எழுந்தது ஏன் நான் ராமனை போல வாழக்கூடாது என ஏனெனில் ராமனின் உடல் நலன்கள் அப்படி . ஆனால் இராமனோ  அப்படியே எனக்கு எதிர்ப்பதம் இப்பொழுதுதான் தம்பி விபீஷணன்   சொன்னது  நினைவுக்கு வந்தது

“  இராவணா , நான் சொல்வதைக் கேள் !  நான் ராமன் மிகவும் நல்லவன்,  நான் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஏனெனில் நீ அனைத்தையும் அறிந்தவன்.  அவரது சேனைப்படை வீரர்கள் அனைவரும் ராமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். ராவணா,  “ 

 தம்பி விபீஷ்னா நீ சொன்னது உண்மைதான் நல்லவரோடு இல்லையேல் நாம் துன்பப்பட வேண்டி இருக்கும் 

எது எது எப்படி நடக்க வேண்டுமோ அது அது அப்படியே நடக்க வேண்டும்.  இதுவே இந்த பிரபஞ்சத்தின் சாரம் ஒருவேளை அப்படி நடக்கவில்லை எனில்  உலகில் அனைத்தும் தெறி கெட்டுப் போய்விடும் என்னுடைய வாழ்வில் எனக்கு என்ன நடக்க வேண்டுமோ ?  அது நடந்து விட்டது. 

இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொன்றும் இந்தப் பிரபஞ்சம் என்ன கட்டளை இடுகிறதோ அதை அப்படியே செய்கிறது நான் மட்டும் விதிவிலக்கா?  என்ன ? 

பிரபஞ்சம் எனக்கு இட்ட கட்டளையை   நான் செய்கிறேன் . அதனால் ஆவது என்னவெனில்  பின்வரும் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக என்னை காட்டி , என்னையும் இந்த உலகில் நிலைபெற்று நிற்கச் செய்திருப்பது இந்த பிரபஞ்சம்தான்.

  ராமன் நிலைபெற்று நிற்கும் வரையிலும் நானும் இருப்பேன் .  யார் ஒருவர் தர்மத்தை கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுடைய அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் அதற்கு மிகப்பெரிய உதாரணம் யார் எனில் ராமனே ஆவார் . 

 தர்மத்தில் ராமன் இருந்ததால்தான் விலங்குகளும் ஆதரிக்கும் என்பதை உணர்த்தவே ராமன் பின்னால் அனுமனும்,  ஜாம்பவானும் இருந்தனர். இதை உணர்த்தவே இப்படி ஒரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. 

ராமனை சுற்றி நல்லவர்களின் கூட்டம் இருக்கிறது. இப்போது ராமனால் அந்த யுகத்தில் மட்டும் என்னை வெல்லவில்லை. ராமன் இனி எத்தனை யுகங்களானாலும் என்னை வெல்வார். காரணம் நல்லோரின் துணை அதிகம். 

 நல்லவரோடு பொல்லாரை  இணைத்து வழி நடத்துகிறது இந்த பிரபஞ்சம் 

ஆம் இதுவோர் அழகிய விளையாட்டு


No comments:

Post a Comment