Tuesday, 21 July 2026

நம்பிக்கை என்னும் ரகசியம்

 நம்பிக்கை என்னும் ரகசியம் 

எத்தனையோ ஞானிகள் மஹான்கள் சொல்வதை விடவா ? நீங்கள் சொல்லி என்ன ஆகப்போகிறது. நீங்கள் சொல்வதால் என்ன மாறிவிடப்போகிறது ? . 

இந்த உலகத்தில் எல்லாம் மாறக்கூடியது. நம்பிக்கை எல்லாவற்றிற்கும் ஆதாரம். இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுத்துகளும் எதோ ஒரு நம்பிக்கையை இருக்கிறது 

நாம் ஒருவருக்கு செய்யும் உபகாரம் எந்த விதத்தில் உள்ளது என்பதைப்பொறுத்து அது நமக்கு திருப்பி அளிக்கிறது. அதன் பெயர் கர்மா என்பார்கள். கர்மா எப்படி பாவமாக மாறுகிறது ஒரு செயலில் எந்த நோக்கமும் , சமூக பலனும் இல்லாமல் “ தான் தனக்கு “ என்று பேராசை கொண்டு வாழும் போது அது பாவமாக மாறுகிறது. இந்த பாவத்தின் பலனே துன்பமாக மாறி படிப்பினைகளை கொடுக்கிறது. 

நமக்கு ஏற்படும் துன்பங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக் கையாள்கிறோம் . சிலர் அன்னையிடம் , சிலர் இறைவனிடம் , சிலர் பிறப்பு ஜாதகம் பார்ப்பவரிடம் என பட்டியல் நீளலாம். ஆனால் இவை அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கையின் அச்சாணி மூலமாகவே சுழல்கிறது. நம்பிக்கை அவ்வளவு பெரியது ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் 

இந்த பிரபஞ்சத்தின் விதிகள் என்பது இறைவனோடு ஒன்றற கலத்தல் என்பதே ஆகும். அதுவே நன்மை என மாறுகிறது. அந்த நன்மை அப்படியே நம்பிக்கையாக மாறுகிறது. ஒரு விதை ஊன்ற பட்டவுடன் மரமாக ஆகிவிடுவதில்லை அந்த விதை முளைத்தவுடன் கனிகளும் காய்களும் நமக்கு தருவதில்லை பூவாகி காயாகி பின்னர் நமக்கு கனியாக கிடைக்கிறது நம்பிக்கை என்னும் கனிக்கு பக்தி மார்க்கத்தில் இறைத்துவம் என்னும் விதை தேவைப்படுகிறது 

காஞ்சி மகா பெரியவாவின் சீடர் கல்கத்தாவில் உள்ள ஒரு செல்வந்தரை சந்தித்தார் அவருக்கு உடல் நிலையில் மிகப்பெரிய வியாதி அவரால் நீர் அருந்த கூட இயலாது நீரை வாயில்  தெளித்துக் கொள்வார் அவ்வளவுதான் காஞ்சி பெரியவாவிடம் இதைச் சொல்லினார் சீடர் 

 காஞ்சி பெரியவா அமைதி காத்தார் பின்னர் இரண்டு மூன்று முறை சீடர் கேட்டுப் பார்த்தார் பெரியவாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை செல்வந்தரை நேரில் அழைத்து வந்து விட்டார் பெரியவா அவர்கள் செல்வந்தரிடம்  மகாபாரதத்தை சொல்லி அதை பிரதி இட்டு வழங்கி வர நோய்கள் தீரும் என்று கூறினார் அதேபோல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்து வந்தார்  அவர் செய்ய கடைசி பிரதியை வழங்கிய போது அவருக்கு தாகம் எடுத்து தண்ணீர் அருந்தியதாக கூறப்படுகிறது

 நாம் ஏன் அதைச் சொல்ல வேண்டும் ?  என பெரியவா நினைத்தாரா ? ஏன் அறிவியல் விஞ்ஞானத்தின் கரை கண்ட மருத்துவர்கள் இல்லையா ?  அவர்களால் முடியாததா? காஞ்சி பெரியவாவால் முடியப்போகிறது என்று எண்ணினாரா ?  இல்லை காஞ்சி பெரியவாவிடம் கொண்ட நம்பிக்கையின் பலம் அது 

சரி  பெரியவா யாரை நம்பினார்?  இதெல்லாம் சொன்னால் சரியாகிவிடும் என்று ?  எல்லாம் இறை சக்தியின் மேல் கொண்ட நம்பிக்கை 

 இந்து தர்ம ஆன்மீக சக்தி நான் இருக்கிறேன் என்று  துவண்டு கிடக்கின்ற மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது 

விஞ்ஞான உலகில் புது புது மாற்றம் நிறைய கண்டுபிடித்து விட்டார்கள் எனினும் மனித மனங்களில் ஓடும் சிந்தனையையோ அதன் ஓட்டங்களையோ கண்டறிய எந்தவிதமான கருவியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இனி மேலும் அது முடியுமா ?  என்பதும் சந்தேகம் ஆனால் இந்து தர்மத்தில் இதற்கான விடை இருக்கிறது. அதுவே அஷ்டமா சித்தி என்னும் ரகசியத்துள் அடங்கி கிடக்கிறது. அது ரகசியமே எனினும் ரகசியம் முடியும் போது உலகம் புதிதாய் பிறக்கிறது எதிர்பார்ப்போம் ஏதாவது புதிதாய் பிறக்கட்டுமே

நம்பிக்கை என்னும் ரகசியம் புதியதாய் பிறக்கும்


No comments:

Post a Comment