Tuesday, 21 July 2026

சந்தித்தேன் சிந்தித்தேன்

 சந்தித்தேன் சிந்தித்தேன் 

வாழ்க்கை ஒரு இன்பகரமான நிகழ்வு. மனிதன் தான் பெறும் அனுபவத்தின் அடிப்படையை முதன்மையாக கொண்டு தனது சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அப்படிப்பட்ட அனுபவம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. ஏன் இந்த மாற்றம் ?  ஆனால் இங்கு சில அனுபவம் என்பது மிக பொதுவானவையே நான் அனுபவம் பெறுவதற்கு எனது அறிவை பயன்படுத்துகிறேன்.  ஆனால் அதில் நான் பெற்றது ஒரு ஊசி முனை அளவிலான அறிவே ஆகும்.  அந்த அறிவையே பெரிதென எண்ணி பிறரிடம் அதை பரப்பவும் செய்தேன் ஆனால் அதனால் கிடைக்கும் அனுபவமானது என் அறிவின் சிறப்பு என்று எண்ணி மற்றவரை ஏசவும் செய்தேன் ஏனெனில் நான் மனிதர்களில் ஒருவன்

 என் இந்த அனுபவத்தை நான் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளேன்?  அது சொல்லும்படி அல்லது வழி நடத்தும் படி நடக்கும் நபராக நான் இருக்கிறேனா?  இல்லையே!  இது என்னுள் எழும் கேள்வி. அப்படி அந்த அனுபவத்தை புரிந்து கொண்டு அதன்படி நடப்பவரையே இந்த உலகம் ஞானி என்கிறது. இது போன்ற ஞானிகளையும் நான் சந்திக்கத்தான் வேண்டும்

சர்க்கரை எங்கெல்லாம் சிதறி கிடக்கிறதோ ?  அவற்றை நோக்கி வேகமாய் விரையும்  எறும்பு போல இங்கு நான் பொருள் இன்பத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த பொருள் இன்ப மாற்றத்தினால் அழுத்தப்பட்டு, அது தரும் கெடு வினைகளையும் நானே ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.  ஏனெனில் இது நான் செய்த வினை

 நான் இறந்து போனால் என்னுடைய எலும்புக்கூடுகளை கூட இந்த மண் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. ஆனாலும் நான் இந்த பூமியை ஆளப்பிறந்தவன் போல என்றும் என்னையே நான் எண்ணிக் கொள்வது மிகச்சிறந்த நகைச்சுவையே.

 இப்படி அனுபவப்பட்டு பொருள் இன்பம் தேடி வாழ்க்கையின் அத்தனை சகல சுகங்களையும் அடைந்த பிறகு கடைசியில் எனது மனம் திருப்தி அடையாமல் மேலும் மேலும் வினையை அதிகமாக்கி கொண்டே செல்கிறது. ஒரு சமயத்தில் எல்லாம் சலித்து எதுவும் உதவ தயாராக இல்லாத போது என் மனம்  நாடிச் செல்வது இறைவனையே.  எனது மனம் மட்டுமல்ல இங்கு எல்லோருடைய நிலையும் அதுவே. இறைவனை சரணாகதி அடைந்த பிறகு  அவன் அருகில் அமைதியாக அமர்கையில் என் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் உதிரும். இதுவே இறைவனுக்கு நான் செலுத்தும் காணிக்கை.  நான் செய்தவனவற்றை எண்ணிக் கொண்டு இருக்கையில் என்னை நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு என்னை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என் மனம் . ஏனெனில் என் நிகழ்காலம் கடந்த காலத்தின் தண்டனையாக உரு மாறி நிற்கிறது.  

 செய்த வினை என்னை தற்போது நான் செய்தவனவற்றையெல்லாம் சொல்லிக் காட்ட ஆரம்பித்து விடுகிறது.  இப்போது என் மனம் என்னை நோக்கி பல கேள்வியை எழுப்புகிறது. எலும்பும் நரம்பும் வலுவாய் இருக்கையில் நான் செய்தவை எல்லாம் வலுவிழந்த பிறகு தாக்கும் அரசனைப் போல தாக்குகிறது.  பதிலுக்காக நான் இப்போது இறைவனை நோக்கி பயணிக்கிறேன்.  அப்பொழுது இறைவன் எனக்கு பதில் பேசாத கல்லாகவே தோற்றமளிக்கிறார்.  காரணம் என் வினையால் நான் கட்டிய சுவர் இறைவனை உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை  


இப்பொழுது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் ஒரு வார்த்தை “ சந்தித்தேன் சிந்தித்தேன்” 


No comments:

Post a Comment