Tuesday, 21 July 2026

புண் பட்ட நெஞ்சை புக விட்டு ஆற்று

புண் பட்ட நெஞ்சை புக விட்டு ஆற்று 

கண்ணனால் காதல் கொள்ளப்பட்ட ராதா முல்லை வனத்தில் துளையிடப்பட்ட

மூங்கிலின் நாதத்தால் ஈர்க்கப்பட்டாள். மெல்ல நகர்கையில் மனதோடு ஒரு ராகம்

“ கண்ணன் தனியாக இருப்பானா ? . இருந்தால்  ….. தன் சந்தேகத்தை கையிலே

கூட்டிக்கொண்டு நுழைகையில் ராதா கண்டாள் அப்பப்பா!!! எத்தனை சொந்தங்கள்

கண்ணனைச் சுற்றி .. மான் கூட்டமும் , மரங்களில் இருந்து உதிர்ந்த பூ கூட்டமும் ,

உதிர்ந்ததால் பிரிந்த நறுமணமும் அவளை அழைக்க , புல்லாங்குழலோ 

கண்ணனின் மூச்சுக் காற்றிலிருந்து விருப்பமின்றி விடுதலை பெறுகிறது.

கண்ணனின் கண் பார்வை மட்டும் இவளைக் கண்ட பாடில்லை. அடர்த்தி நிறைந்த

மரங்கள் சூரியனின் வெளிச்சத்தை உள்ளே அனுப்ப மறுத்து குடை போல விரிந்து

நிற்கிறது.  ஆனால் அங்கு  வரிசையாக நகர்ந்து கொண்டிருக்கும் நதியின்

படை வீரர்கள் தன் ஆரவாரத்தை நிறுத்துவதாக தெரியவில்லை.

தலை திருப்பி மெல்லிய குரலில் “ வா , ராதா என்று அவன்  அழைத்த விதம் காதலின்

சமிக்ஞையோ?  என்று உணர்ந்து கொண்டாள் ராதை. கண்ணனின் இரு கையை

இறுகப் பற்றிய உடன் தேனீக்கள் ராகம் இசைத்து மெட்டு கட்டி பாடிய பாடலில்

அயர்ந்து போயின அனைவரது கண்களும். வெகு நேரம் நடந்து வந்த

அவள் பாதத்தில் வலி நோகும் என்று அவன் மருத்துவ சேவையை

தொடங்கியதிலிருந்து “ ஆரம்பிக்கிறது இன்றைய கணவன்மார்களின் நிலை “ .

ராதா தன் மனதுக்குள் எண்ணினாள் “ கிடைத்த வாய்ப்பை கருதி  பேசியே

இந்த பொழுதை தீர்த்துவிட வேண்டும் என்று”  எண்ணியவள் சட்டென கண் விழித்தாள்.

கண்டது கனவென ஆனதால்  புண்பட்டது அவள் நெஞ்சம்.

புண்பட்ட அவள் மனதில் கண்ணனை புக விட்டு ஆற்றிக்கொண்டாள் ராதை .



No comments:

Post a Comment