Tuesday, 21 July 2026

கேள்வியும் பதிலும்

 கேள்வியும் பதிலும் 

ராமனைக் கண்டவுடன் அனுமனின் பூரிப்பு அதிகமானது இங்கே அனுமன் ஒவ்வொரு கேள்வியாக கேட்க ராமன் அவனைப் புரிந்து கொண்டு பதில் அளிக்கிறான்ராமன். 

ராமா நம் வாழ்வை உருவாக்குவது நாம் செய்யும் தேர்வா ?? . அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்டதா? 

சற்று நேரம் அமைதியாக இருந்த ராமன் தன் பதில்களை மலர் போல உதிர்த்து விடுகிறான். அனுமா , நம்முடைய வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்க பட்டது தான் காரணம் என்னவெனில் நாம் செய்யும் செயல் நிறைவடைய நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனால் அத்தனையும் வெற்றி அடைவது இல்லை காரணம் முன்னரே அவை  தீர்மானிக்கப்பட்டவை தான் நம் நாட்டில் வெற்றிகரமாக இயக்கப்படும் என்று எண்ணி நாம் செயல்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் கூட பல நேரங்களில் தோல்வியைத் தழுவுகின்றன நம்முடைய தேர்வுகள் நம் வாழ்வை உருவாக்குகிறது எனில் ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு தேர்வு இருக்கும் ஏனெனில் மனம் நிலையற்றது அனுமா அடிக்கடி மனிதர்கள் எடுத்துக் கூறும் பகவத் கீதையின் ஒரு சாராம்சம் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதை உற்று நோக்கினால் அதன் உண்மையான அர்த்தம் புரியும் அதன் அர்த்தம் இதுவே. 

மனிதர்களில் ஒருவனாக உங்களை நான் கேட்கிறேன் துக்கம் என்பது ஏன் வருகிறது? 

இது கர்ம வினையின் ஒரு பகுதி அனுமா நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் துன்பத்தை விதைக்கவில்லை ஆனாலும் அதை அறுவடை செய்கிறோம் துக்கம் நாம் இன்னும் கற்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது நன்கு கற்ற மாணவனுக்கு ஆசிரியர் கடினமான தேர்வுகளை நடத்துவார் காரணம் அவன் இன்னும் ஒரு படி மேலே வர வேண்டும் என்பதற்காகவே குறைவாக கற்ற மாணவருக்கு அவனுக்கு ஏற்றார் போல ஆசிரியர் தேர்வுகளை நடத்துவார் விதிக்கு விலக்கு இங்கே யாரும் இல்லை காலத்தின் தேவை கருதி எதிர்காலம் சிறக்க விதி கொடுக்கும் தேர்வுதான் இந்த துக்கம் ஆனால் இதை பெரிதாக கருத வேண்டிய அவசியம் இல்லை அனுமா உனக்கு தெரியாததா?  எவ்வளவு கடினமான பாதையை கடந்து வந்திருக்கிறாய் நீ.  துக்கம் மனிதனை நெறிப்படுத்தும் கடினமான பாதை 

பிரபு ராமரே மனிதன் ஏன் பிறப்பெடுத்த வேண்டும் தன்னை அறியவா?  அல்லது இந்த கர்மாவின் கடனைத்     தீர்க்கவா? 

மனிதன் கர்மாவின் கடனை தீர்ப்பதற்காகவே பிறக்கக் கூடாது காரணம் என்னவெனில் கர்மாவின் கடனை தீர்க்க அதனால் செய்யப்படும் எந்த ஒரு செயலும் கர்மாவின் கடனை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது ரமண மகரிஷி சொல்வதைப்போல சும்மா இரு என்பது கர்மாவின் கடனை வெகுவாக குறைத்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதன் அர்த்தம் என்னவெனில் சும்மா இருப்பதால் ஒரு மனிதன் தன்னை அறிய முற்படுகிறான்.  தன்னை அறியும் நிலை வரும்போது அவன் கர்ம வினை கடன் கொஞ்சம் கொஞ்சமாக கழிகிறது.   கடனை தீர்க்க நாம் நம்மை அறிய முற்படுவது அவசியம் அனுமா.  இயந்திரத்தை இயக்கும் தொழிலாளி அதன் தன்மையை முழுவதுமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் அதுபோல நம் வாழ்வை இயக்க நம்மை நாம் அறிதல் அவசியம்.  அப்படி நாம் அறிந்து விட்டால் இந்த முழு பிரபஞ்சமும் நம்மிடம்  சரணடைந்து விடும் தன்னை அறியும் ஆற்றலே பிறப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் அனுமா. 

ஆசை முற்றிலும் மறைந்து விடுமா பிரபு ? 

என்ன அனுமா இப்படி கேட்கிறாய் ஆசை யாரை விட்டது ஆசை முற்றிலும் மறைந்து விடாது.  ஆசை தோன்றுவதில் தவறில்லை அனுமா.  அது பேராசையாக வளர்வதில் தான் தவறு இருக்கிறது.  இங்கு யார் தான் ஆசை இன்றி இருப்பார் தனக்கு தேன் தேவைப்படாது என்று தெரிந்தும் தேனீ மலரில் உள்ள தேனை சேகரிக்கிறது தனக்கு பயன்படாது என்று தெரிந்தும் ஈசல் புற்றைக் கட்டுகிறது எல்லாம் ஆசையின் விளையாட்டு. இதைத்தான் நம் முன்னோர்கள் கரையான் கூடுகட்ட கருநாகம் குடியிருக்க என்றனர்.  அதாவது அடுத்தவருக்கு நலம் விளைவிக்கும் ஆசை என்றும் துன்பத்தில் முடிவதில்லை.  மேலும் தன்னை அறிந்தவன் ஆசை வைப்பான் ஆனால் அது உலக நலன் கருதி அமையும். அந்த ஆசை பக்தியாக மாறும்.  பக்தியே அவனுக்கு நல்ல பாதையை காட்டி பின்பு அது முக்திக்கும் வழிகாட்டுகிறது.  ஒருவகையில் ஆசை நல்லது அனுமா. தன்னை அறிந்தவனிடம் ஆசை இருப்பதில் தவறில்லை ஆன்ம  ஞானம் என்பது ஆசையை முற்றிலுமாக அழிப்பதில் இல்லை மாறாக மற்றவரின் வாழ்வை சிறப்பிக்க அவர்கள் காட்டும் நெறி.  தன்னை அறிந்தவனின் ஆசை எப்போதும் கட்டுக்குள் இருக்கும் ஆன்ம ஞானம் ஆசையை மாற்றுகிறது நல்வழிப் பாதையில். 


No comments:

Post a Comment