Tuesday, 21 July 2026

சனாதன தர்மம்

 சனாதன தர்மம்

துறவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் கருத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்து தர்மம் உண்மையில் துறவறம் என்பது பற்றி குறிப்பது என்னவெனில் நமக்கு எதிரே உள்ளவற்றை நேசிக்கவும் நம்மை நாம் துறப்பதுமே துறவறம் என்கிறது. பொதுவாக இந்து தர்மம் என்ன சொல்கிறது ? . நம்மை நாம் உணர்வதே துறவறம். அப்படிப்பட்ட துறவறத்தை ஏற்றுக்கொண்டவர்கள் நிறைய பேர். திருவள்ளுவர் உட்பட 

அப்படி தன்னை தானே அறியும் தன்மை கொண்டவர்கள் மற்றவரின் துயரத்தை கண்டு வாடியவர். இலை செடி கொடிகளுக்கு உயிரில்லை என்று கருதியவர்களுக்கு மத்தியில் நெல்லும் உயிரன்றே , நீரும் உயிரன்றே என்று பாடியதும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம்  வாடினேன். என்று சொற்களில் உயிரோட்டம் கொடுத்ததையும்  என்னவென்று சொல்வது ?. அவர்கள் ஞானிகள். சிறு செடியின் துயர் தாங்காதவர்கள். 

காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்று பாடினாரே பாரதியார் அவர் அன்பின் சிவ ரூபம் இல்லையா ? இவையெல்லாம் தன்னை துறந்தவர்களாலேயே செய்யப்படும் அரிய செயல். இது இந்து தர்மத்தின் அடிப்படை. 

துறவறம் என்றால் புறத்தோற்றத்தில் நாம் ஏற்படுத்தும் ஓர் மாறுபாடு என அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றினால் எந்த பயனும் இல்லை என்று வெறும் கோவணத்துடன் நின்ற பட்டினத்தார் அதற்கொரு எடுத்துக்காட்டு. உண்மைத் துறவறம் என்பது புற உலகை துறப்பதால் அமைந்து விடாது மனத்தைத் திறந்து இறைவனை அமர்த்திட வேண்டும். 

சஞ்சலத்தில் நீங்கள் அமர்ந்திருக்கின்ற போது இறை ஆற்றலுக்காக கோவிலுக்கு சென்றாலும் அது நிம்மதி அடையாது. மனதை பக்குவ படுத்துங்கள் மனைவி மக்களை துறப்பது துறவறம் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு. 

மனைவி மக்களை நேசியுங்கள் உறவுகளை நேசியுங்கள் அன்பின் விதையை இடுங்கள். நீங்கள் வேறு , உங்கள் மனைவி வேறு என்று எண்ணாமல் நானும் அவளும் ஒன்றே என்று எண்ணுங்கள். அதுவே தூய்மையான துறவறம். இல்லற வாழ்வில் மனைவிக்கான பங்கை அளியுங்கள். இதையே அர்த்தநாரீஸ்வரராய் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். மனைவிக்கு சம பங்கு அளித்ததில் முதன்மையானவர் அவர். 

நாம் இந்த உலகில் பிறக்க காரணம் வினைப்பயன் நீக்கி மறுபிறவி வேண்டாமல் வாழ வேண்டும் என்பதே 

இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தை தேடுங்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் போல. 

இந்து என்பது மதம் அல்ல அது ஓர் தர்மம் வாழும் முறையை கற்றுக் கொடுக்கும் தர்மம். அதுவே சனாதன தர்மம் . 


No comments:

Post a Comment